2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

’அரச நிறுவனங்களின் சேவைகள் வினைத்திறனாக்கப்படும்’

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், பேரின்பராஜா சபேஷ் 

மட்டக்களப்பு மாவட்ட அரச நிறுவனங்களின் சேவைகளை வினைத்திறன்மிக்கதாக தரப்படுத்த உற்பத்ததிறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக மாவட்டச் செயலாளர் கே. கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள அரச நிறுவனங்களின் வினைத்திறன் விளைதிறனை அதிகரிப்பதற்காக அந்நிறுவனங்களில் கடமைபுரியும் தெரிவு செய்யப்பட்ட உத்தியோகத்தர்களுக்கான 5 நாட்கள் கொண்ட உற்பத்தித்த்திறன் பயிற்சி நெறி, மாவட்டச் செயலாளர் தலைமையில், மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று (10) நடைபெற்றது. 

இப்பயிற்சி நெறியின் உள்ளடக்கங்களாக அரச நிறுவனங்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்குத் தேவையான அனைத்து நுட்பங்களும், அதற்கான  எண்ணக்கருக்களும் மாவட்டத்திலுள்ள சிறந்த வளவாளர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X