2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அரச பணியிலிருந்து ஓய்வு

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன், ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் மத்திய விவசாயத் திணைக்களத்தின் மாவட்டப் பணிப்பாளராகக் கடமையாற்றிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த யாசீன்பாவா முகம்மது இக்பால், தனது 28 வருட சேவையின் பின்னர் சுயவிருப்பத்தின் பெயரில் தனது 55ஆவது வயதில், அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவரின் ஓய்வையொட்டிய பிரிவுபசார நிகழ்வொன்று, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் கேட்போர் நேற்று (22) கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர் திருமதி கலாமதி பத்ராஜா, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந், உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், தேசிய உரச் செயலகத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ். சீராஜுன், விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பிரசன்னமாயிருந்தனர்.

இவரின் சேவையைப் பாராட்டி, திணைக்களப் பணியாளர்களால் தங்கப் பதக்கமும் நினைவுச் சின்னமும் வழங்கிவைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X