2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டியது காலத்தின கட்டாயம்: ஹிஸ்புல்லாஹ்

Gavitha   / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

'அரசியல் கைதிகளை விடுதலை செய்வது காலத்தின் கட்டாயமாகும்' என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று திங்கட்கிழமை (08) அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'எந்தவித குற்றச்சாட்டுகளும் இன்றி பல வருட காலமாக   சிறைச்சாலைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளை நிபந்தனையின் அடிப்படையிலாவது விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். இலங்கை அரசு சர்வதேச ரீதியில் பல சவால்களை முகம்கொடுத்து வருகின்ற நிலையில், இப்பிரச்சினை மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தும்' என்று அவர் கூறியுள்ளார்.

எந்தவித குற்றச்சாட்டுகளுமின்றி சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் பல தடவைகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி உரையாற்றியுள்ளேன் என்றும் அவர் கூறினார்.  

'கடந்த காலங்களில் பல அரசியல் கைதிகள் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இதுபோன்று நிபந்தனைகளின் அடிப்படையில் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். அரசியல் கைதிகள் பிரச்சினை ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினையாக பார்க்காது,  இதனை பொதுப் பிரச்சினையாக கருதவேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X