2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

அரச வைத்திய அதிகாரிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 28 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.பாக்கியநாதன், வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்

2017ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தில் வைத்தியத் துறைசார்பாக முன்வைக்கப்பட்டுள்ள முன்மொழிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மட்டக்களப்பில் இன்று திங்கட்கிழமை (28), வைத்திய அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச நிர்வாகத்தைத் தனியார் மயப்படுத்தும் மறைமுக முயற்சிகள்,  தனியார் துறையினருக்கு ஓய்வூதியத்தை வழங்கி புதிய அரச ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி என்பனவற்றை அறிமுகப்படுத்துதல், அரச நிர்வாகத்தை முடக்கும் முயற்சிகள், வைத்தியர்கள் மேலதிக நேரத்தில் உழைக்கும் பணத்துக்கும் அதிக வருமான வரி அறவிடும் திட்டம் மற்றும் வைத்தியசாலையின் உள்ளே பிரத்தியோக மருந்தகங்களை நிறுவி மருந்துகளை விற்பனை செய்தல் போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஒரு வாரத்தினுள் இவற்றுக்கான தீர்வுகள் கிடைக்காதவிடத்து நாடுதழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X