Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜனவரி 30 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.எஸ்.எம். ஹனீபா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரச வைத்திய அதிகாரிகளின் 08 கோரிக்கைகளை முன்வைத்தும் அரச வைத்தியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று (30) மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளிலும் காலை 08 மணி தொடக்கம் 24 மணித்தியால வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகள், சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலங்களில் கடமையாற்றும் அரச வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இப்பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, மேற்படி அனைத்து வைத்தியசாலைகளிலும் வெளிநோயாளர் சிசிக்சை பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சிகிச்சை நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டன. இருப்பினும், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் நடவடிக்கைகள் வழமை போன்று இயங்கியது.
அத்துடன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலும் வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்கள் குறைவாக காணப்பட்டதுடன், அவசர நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும், தாதியர்களின் சேவை மற்றும் ஏனைய வைத்தியர்கள் சத்திர சிகிச்சை கூடம் உட்பட பல பிரிவுகளில் தங்கு தடையின்றி சேவை இடம்பெற்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
30 minute ago
2 hours ago