2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

அரசமைப்பு இடைக்கால அறிக்கை தொடர்பில் கலந்துரையாடல்

பேரின்பராஜா சபேஷ்   / 2017 நவம்பர் 20 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசமைப்புச் சட்டத்தின் இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இடம்பெறவுள்ளது.

திருகோணமலை நகரமண்டபத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி மாலை 3 மணிக்கும்; கல்முனை நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள நால்வர் கோட்டம் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி காலை 9 மணிக்கும்; மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பெர்டினன்ஸ் மண்டபத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி மாலை 02.30 மணிக்கும் இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, இடைக்கால அறிக்கை பற்றிய தெளிவூட்டல்களை மேற்கொள்ளவுள்ளனர்.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அரசமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பான உண்மைத் தண்மையை அறிந்துகொள்ள அனைவரையும் அழைப்பதாக, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

“அனைத்து அரசியற் பிரமுகர்கள், சமுக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், உயர் கல்வி மாணவர்கள் எனப் பலதரப்பினரும் கலந்துகொண்டு, இடைக்கால அறிக்கை தொடர்பிலான தெளிவின்மைகளில் இருந்து விடுபட்டு உண்மை விளக்கம் பெறுவதற்கு இக்கலந்துரையாடல் ஒரு வாய்ப்பாக அமைவதோடு, மற்றையவர்களுக்கும் தெளிவூட்டுவதற்கும் உதவியாக இருக்கும்” எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X