Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 02 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
தற்போதைய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வெளியேறுவது குறித்துப் பரிசீலித்துக் கொண்டிருப்பதாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இன்று (02) தெரிவித்தார்.
ஏறாவூர் நகர சபை, ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை ஆகியவற்றுக்காக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் தெரிவான உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு, ஏறாவூர் நகரசபைக் கேட்போர்கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
அங்கு சத்தியப்பிரமாண நிகழ்வு முடிந்ததன் பின்னர் உறுப்பினர்கள், கட்சி மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், “பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாளை மறுநாள் (நாளை) வருகிறது. இதில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற உறுதியான தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை" என்று தெரிவித்தார்.
எனினும், தற்போதைய அரசாங்கம், இரண்டரை ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள போதிலும், பொருளாதார அபிவிருத்தி இன்மை, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை ஆகிய காரணங்களுக்காக, மக்கள் தமது அதிருப்தியை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வெளிப்படுத்தியுள்ளனர் எனத் தெரிவித்த அவர், மக்களின் குரலுக்கும் செவிசாய்க்க வேண்டிய தேவை உள்ளது எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், "இவ்வாறே, அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழ்நிலையில் நாங்கள் இருந்து விடாமல், அடுத்த 18, 20 மாதங்களுக்கான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
“அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத ஒரு சூழ்நிலைக்கு, நாம் களம் அமைத்துக் கொடுத்துவிடவும் முடியாது" என்று தெரிவித்தார்.
நாட்டின் அரசாங்க அமைப்பு, பொருளாதாரத்தைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்க வேண்டுமெனத் தெரிவித்த அவர், அரசாங்கத்திலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறுவது தொடர்பான அவசரமான சந்திப்பொன்று, ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
புதிதாகத் தெரிவான உறுப்பினர்களுக்கு அறிவுரைகளை வழங்கிய இராஜாங்க அமைச்சர், நேர்மையாகவும், இன, மத, பிரதேச, மொழி வேறுபாடுகள் இன்றியும் செயற்பட வேண்டும் எனவும், வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago