2025 மே 19, திங்கட்கிழமை

அரசியல் பழிவாங்கள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜனவரி 25 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்கள் மீது அரசியல் பழிவாங்கள் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக, அக்கட்சியின் காத்தான்குடி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தெரிவித்தனர்.

அந்த பெரமுன கட்சி சார்பில் காத்தான்குடியில் போட்டியிடும் பெண் வேட்பாளரிடம் பொலிஸ் சி.ஐ.டி எனக் கூறி, இரண்டு இலட்சம் ரூபாய் கப்பம் பெற இருவர் முயற்சித்ததாகவும்  அவர்கள் தெரிவித்தனர்.

காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்கள், காத்தான்குடியிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (23) இரவு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X