2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘அற்ப சலுகைகளுக்காக மக்களின் அபிலாசைகளை விற்க முடியாது’

பேரின்பராஜா சபேஷ்   / 2019 ஜனவரி 30 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சு பதவிகளைப் பெற்று, அரசாங்கத்தின் அற்ப, சொற்ப சலுகைகளை அனுபவித்துக்கொண்டு, எமது மக்களின் அபிலாசைகளை விற்க முடியாதென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு - செங்கலடி விவேகானந்தா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வின் இறுதிநாள் நேற்று (29) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் கி.சிவலிங்கராசா தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் உரையாற்றிய யோகேஸ்வரன் எம்.பி மேலும் தெரிவிக்கையில், கூட்டமைப்பு ஏன்  அமைச்சுப் பதவிகளை ஏற்கவில்லையொன மக்கள் கேள்வியெழுப்புகிறார்கள் என்றார்.

தமிழினம் இழந்த உரிமையைப் பெற்று, சுய நிர்ணய உரிமையுடனும் வாழவேண்டும் என்பதற்காக, எமது உறவுகள் பல தியாகங்களை செய்தார்கள் என்றும் இத்தியாகம் கார்பட் வீதி அமைக்கவும் கட்டடங்களை நிர்மாணிக்கவும் அபிவிருத்திகாகவும் அல்லவென்றும் அவர் தெரிவித்ததுடன், அமைச்சுப் பதவிகள் மூலமாக அந்தத் தியாகத்தை  நாம் கொச்சைப்படுத்த முடியாதென்றார்.

நாங்கள் அமைச்சுப் பதவிகளைப் பெறாவிட்டாலும் இந்த அரசாங்கத்திலிருந்து பெறக்கூடியவற்றைப் பெற்று, எமது மக்களுக்கான அபிவிருத்திகளை மேற்கொள்கின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.  

இதேவேளை, பல மாகாண சபைகள் கலைக்கப்பட்டு, ஆளுநர்களின் கைகளில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாதெனத் தெரிவித்த அவர், மக்கள் ஆணையைப் பெற்ற குழுவிடம் ஆட்சியை வழங்கப்படுவதற்காக, முதலிலே மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெற வேண்டுமென நிலைப்பாட்டிலே தாம் உள்ளதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .