கனகராசா சரவணன் / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த பஸ்ஸில், ஹெரோய்ன் போதைப்பொருளைக் கடத்தி வந்த இருவரை, மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் பகுதியில் வைத்து நேற்று (16) இரவு கைதுசெய்ததாக, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் - தாமரைக்கேணி, மீச்சு நகரைச் சேர்ந்த 20, 30 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களிடமிருந்து 988 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலையடுத்து, மாவட்டப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ்.சமந்த தலைமையிலான புலனாய்வுப் பிரிவினர், சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள பஸ்தரிப்பிடத்தில், சம்பவதினமான நேற்று முன்தினம் மாலை காத்திருந்தனர்.
இதன்போது, கொழும்பிலிருந்து காத்தான்குடிக்குப் பயணித்த இ.போ.ச பஸ்ஸை நிறுத்தி, மேற்படி இருவரையும் சோதனையிட்டபோது, ஒருவர் தனது ஆசன வாயிலிலும் மற்றவர் நீள்காற்சட்டை பெல்ட்டிலும், ஹெரோய்னை மறைத்து எடுத்துவந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட குறித்த இருவரையும், மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரிடம், மாவட்டப் புலனாய்வுப் பிரிவினர் ஒப்படைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .