Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், ரு.அனிதா, வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு – ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 05 மாணவர்களுக்குக் கற்பிப்பதற்கான ஆசிரியரை நியமிக்கக் கோரி, பாடசாலை முன்றலில் இன்று (24) பெற்றோர் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இதற்கான உடன் தீர்வை மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் வழங்க வேண்டுமென, ஆர்ப்பாட்டத்தில் பெற்றோர் கோரி நின்றனர்.
“எங்கள் பாடசாலையை பழிவாங்காதீர்கள்”, “தரம் 05 மாணவர்களுக்கு ஆசிரியர் வேண்டும்”, “எமது மாணவச் செல்வங்களைப் பறக்கணிக்காதே” என எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் ஏந்தியிருந்தனர்.
ஏறாவூர் நகர சபை உறுப்பினர் நடேசபதி சுதாகரனும் கலந்துகொண்டிருந்த இந்த ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், ஆர்பாட்டடக்ககாரர்களுடன் மேற்படி பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடினார். இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களால் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மகஜரொன்று கையளிக்கப்பட்டது.
அதேவேளை, வலயக் கல்வி அலுவலகத்திருந்து அதிகாரிகள் வருகை தந்திருந்திருந்ததுடன், அதிகாரிகள், பெற்றோர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோருக்கிடையிலான தொடர் கலந்துரையாடல், பாடசாலை அதிபர் அலுவகத்தில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில், இப்பாடசாலைக்கான தரம் 05 மாணவர்களுக்கான தகுதிவாய்ந்த ஆசிரியர் அடுத்த வாரம் நியமிக்கப்படுவார் என வலயக் கல்வி அலுகலக அதிகாரிகளால் வாக்குறுதியளிக்கப்பட்டதாக, பெற்றோர் தெரிவித்தனர்.
இந்த வாக்குறுதியை அடுத்து சுமார் 03 மணி நேரத்தில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago