2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஆட்சிக் கவிழ்ப்பு என்பது 'சிறுபான்மையின மக்களுக்கான அபாய மணியாகும்'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 03 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்
 
'நாட்டில் தற்போது நடைபெறும் ஆட்சியைக் கவிழ்ப்பது என்பது சிறுபான்மையின மக்களுக்கு அடிக்கப்படும் அபாய மணியாகவே நான் கருதுகின்றேன். ஆட்சிக் கவிழ்ப்புக்கு சிறுபான்மை இனத்தவர்கள் எந்தவிதத்திலும் பங்குதாரிகளாக மாறக் கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவம் இடம்பெற்றால் மீண்டும்  அபாயத்தை நோக்கிச் செல்ல நேரிடும் எனவும் அவர் கூறினார்.
 
ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, கரடியனாறு மகா வித்தியாலயத்தில் இன்று  (03) நடைபெற்றது. இதில்  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது,  'முன்னாள் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த வருடத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பேன் எனக் கூறியுள்ளார். அவர் ஆட்சியைப் பிடிப்பேன் என்று கூறியிருந்தால், நாம் பெரிதுபடுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஆட்சியைக் கவிழ்ப்பேன் என்று கூறும் செய்தியானது சதியுடன் கூடிய திட்டமாக இருக்கலாம்.
ஆட்சிக் கவிழ்ப்பு ஏற்பட்டால், கடந்த காலத்தில் இடம்பெற்றது போன்று பேச்சு, எழுத்துச் சுதந்திரம்; காவு கொள்ளப்படும்' என்றார்.
 
'அரசியல் தீர்வைப்; பெறுவதற்காகச் சர்வதேசத்தின் பார்வையின் முன்னிலையில் புதிய அரசாங்கம் பேச்சுவார்த்தை மேற்கொள்கின்றது. இந்நிலையில், மீண்டும் வன்முறை ஏற்படாத வகையில் நல்லிணக்கமாகன தீர்வு கிடைக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றோம்.
 
ஒரு சமூகத்தை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கும் எந்த இனமும் நிம்மதியாக வாழ முடியாது என்பது கடந்தகால வரலாறு. தற்போதைய சூழ்நிலையில் சரியான பொறிமுறையின் கீழ் பேச்சுவார்;த்தை நடத்தப்பட்டு, இணக்கமான தீர்வு காணப்பட வேண்டும்.
 
மேலும், கூட்டாட்சி என்பது சகலரும் கூடி வாழும் ஆட்சி முறையாக அமையுமே தவிர, நாட்டைப் பிரிப்பதற்கான ஆட்சியாக அமையவில்லை.  சமஷ்டிக் கட்டமைப்பை பேரினவாதிகள் வித்தியாசமாகச் சித்தரித்து அப்பாவி மக்களைக் குழப்புகின்றார்கள்.
 
புதிய அரசியலமைப்பின் மூலம் அனைவரும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய நல்லாட்சியை எதிர்பார்க்கின்றோம்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X