2025 மே 21, புதன்கிழமை

ஆணொருவரின் சடலம் மீட்பு

வ.துசாந்தன்   / 2017 நவம்பர் 01 , பி.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை காட்டுப்பகுதிக்குள் இருந்து ஆணொருவரின் சடலம், இன்று (01) மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலம், அரசடித்தீவு கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான க.இராசரெத்தினம் என்பவரது என அடையாளங்காணப்பட்டுள்ளது.

குறித்த நபர், தாந்தாமலையில் மேட்டுநிலப்பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், சிறிய கம்புகள் வெட்டுவதற்காக தாந்தாமலைப் பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு நேற்று (31) சென்றிருக்கின்றார்.

அவ்வாறு சென்றவர், மாலை வரை வீட்டுக்குத் திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடியிருக்கின்றனர்.

இந்நிலையிலே, நேற்றுக் காலை 6 மணியளவில் தாந்தாமலையின் காட்டுப்பகுதியில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கையில் கத்தியுடனும் அருகில் கம்புகள் காணப்பட்ட நிலையிலே, சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளை, கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X