Editorial / 2023 மே 09 , பி.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
வயோதிப பெண்ணொருவருக்கு தன்னுடைய ஆண்ணுறுப்பை காண்பித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் வாள்வெட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் இருந்து வீடு சென்ற இளைஞனின் வீட்டை வாள்வெட்டுக்குழுவினர் முற்றுகையிட சென்றனர்.
அதனை தடுத்து நிறுத்திய வயோதிப பெண் ஒருவருக்கு தனது காற்சட்டையை கழற்றி ஆண்ணுறுப்பை காண்பித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் குண்டா வாள்வெட்டுக்குழுவைச் சேர்ந்த இருவரை திங்கட்கிழமை (8) கைது செய்துள்ளதாகவும் இருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
4 பேர் கொண்ட வாள்வெட்டு குழு அந்த பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் மீது கடந்த 2ம் திகதி வாள்வெட்டுதாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் வாள்வெட்டுதாக்குதலுக்குள்ளான இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று திங்கட்கிழமை (08) வீடு திரும்பியுள்ளார் இதனையடுத்து அந்த இளைஞன் மீது தாக்குதல் நடாத்த இளைஞனின் வீட்டை குண்டா வாள்வெட்டுக் குழுவினர் முற்றுகையிட்டனர்.
இதன்போது அங்கு குண்டா குழுவினருக்கும் இளைஞனின் உறவினருக்கும் இடையே பெரும் வாக்குவதம் ஏற்பட்து. தாக்குதலுக்குள்ளான இளைஞனின் அம்மாவான 64 வயோதிப பெண் வெளியில் வந்து குண்டாகுழுவினரை வீட்டுக்குள் உள் நுழைய விடாது தடுத்து நிறுத்தினார்.
இந் நிலையில் குண்டாகுழுவைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் தனது காற்சட்டையை கழற்றி வயோதிப பெண்ணுக்கு தனது ஆண்ணுறுப்பை காண்பித்துள்ளனார். .
இச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வயோதிப பெண் முறைப்பாட்டையடுத்து தலைமறைவாகியிருந்து குண்டா வாள்வெட்டு குழுவைச் சேர்ந்தவரும் ஆண் உறுப்பை காண்பித்தவர் உட்பட இருவரை திங்கட்கிழமை இரவு பொலிஸார் கைது செய்ததுடன் அந்த குழுவைச் சேர்ந்த இருவர் தொடர்ந்தும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago