Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
ரீ.எல்.ஜவ்பர்கான் / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு நகரின் பிரபல பாடசாலையான மெதடிஸ்த மத்திய கல்லூரிக்குச் செல்லும் பிரதான வீதியான ஆமென் கோணர் வீதியில் பாடசாலை முடிவடையும் நேரத்தில் மாணவர்களை ஏற்றிச் செல்ல இயலா வண்ணம் வீதியின் இரு பக்கங்களிலும் வர்தகர்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால் பல அசௌகரியங்களும் விபத்துகளும் ஏற்படுகின்றன.
இவற்றைத் தவிர்க்கும் முகமாக, மட்டக்களப்பு மாநகரசபை அமர்வில், மாநகர சபை உறுப்பினர் கு.காந்தராஜாவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் தீர்மானத்துக்கு அமைவாக, காலை 06 மணி தொடக்கம் 08 மணிவரையும் நண்பகல் 12 மணி தொடக்கம் 02 மணி வரையும் மேற்படி வீதியில் வாகனங்கள் நிறுத்தி வைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான அறிவித்தல் பலகை, பொலிஸாரின் அனுமதியுடன், சிவில் பாதுகாப்புக் குழுத் தலைவரும் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினருமான ஸ்பன் ராஜன் தலைமையில், இன்று (18) காலை நடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago