2025 மே 09, வெள்ளிக்கிழமை

ஆரம்பக் கற்றல் வள நிலையம் திறந்துவைப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.திவாகரன்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட பட்டிப்பளை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வளநிலையத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், இன்று (10) திறந்துவைத்தார்.

“அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆரம்ப கற்றல் வளநிலையக் கட்டடமே திறந்துவைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் த.தியாகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், பிரதேச சபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், வலயக் கல்விப் பணிப்பாளர் சி.சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X