Editorial / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
மன்முனைப்பற்று (ஆரையம்பதி) பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம், தனது கடமைகளை நேற்று (11) பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஆரையம்பதி சிவன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர், மன்முனைப் பற்று பிரதேச சபையில், தவிசாளருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த வைபவத்தில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளார் பி.பிரசாந்தன், மன்முனைப் பற்று பிரதேச சபையின் உறுப்பினர்கள், சபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
மன்முனைப் பற்று பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள எஸ்.மகேந்திரலிங்கம், மன்முனைப் பற்று பிரதேச சபைத் தேர்தலில் சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்டார்.
இவர், இச்சபையின் முதலாவது அமர்வின் போது தவிசாளருக்காகப் போட்டியிட்டு, 8 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago