எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மே 24 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் அற்ற ஒரு சமூகமாகவும் சிறந்த உடல் ஆரோக்கியமான சமூகமாகவும், சமூகத்தை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, தேசிய உடல் ஆரோக்கிய வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதென, மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம். உதயகுமார் தெரிவித்தார் .
தேசிய உடல் ஆரோக்கிய வாரத்தையொட்டி, மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான ‘ஏரோபிக்’ உடல் அப்பியாசச் செயற்பாடுகள், மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தலைமையில் நேற்று (23) இடம்பெற்றன. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “நோயை அடிப்படையாகக் கொண்டு, அதற்கான சிகிச்சையாக ஏரோபிக் என்கின்ற உடல் ஆரோக்கியச் செயற்பாடு, 1956ஆம் ஆண்டு மேலைத்தேய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
“இது இலகுவான பயிற்சி முறையாகும். அலுவலக உத்தியோகத்தர்கள், மிகவும் வேலைப்பளு மத்தியிலும் உள அழுத்தம் காரணமாக பல்வேறு வகையான தொற்றா நோய்களுக்கு உள்ளாகின்றார்கள். அதன் அடிப்படையிலே, உடல் ஆரோக்கியம் சம்பந்தமாக பல்வேறு வேலைத்திட்டங்களை ஜனாதிபதி செயற்படுத்துகிறார்” என்றார்.
21 Dec 2025
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Dec 2025
21 Dec 2025