2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆலோசனைக் குழு உறுப்பினராக சாணாக்கியன் எம்.பி

Princiya Dixci   / 2021 ஜனவரி 06 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தின்

நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் ஆலோசனைக் குழு உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணாக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இக்குழு உறுப்பினராக நாடாளுமன்றத்தால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவானது நாட்டின் அபிவிருத்தியிலும் வளர்ச்சியிலும் பங்குகொள்ளும் முகவர் நிறுவனங்களினது நடவடிக்கைகளை கண்காணிக்கும் ஆலோசனைக் குழுவாகும். இதில் பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்கள் அடங்குகின்றன. 14 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவின் முதலாவது கூட்டம், நாளை (08) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X