Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 நவம்பர் 12 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.விஜயரெத்தினம்
“நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ அணி வெற்றி பெறுமானால், எதிர்காலத்தில் வருகின்ற நாடாளுமன்ற அல்லது மாகாண சபைத் தேர்தலிலோ போட்டியிடுகின்றவர்கள், வெறுமென இனவாதத்தினூடாக மாத்திரமே வெற்றி பெற முடியும் என்பதைச் சொல்லும் மிக ஆபத்தான விடயம்” என, முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று (11) அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
“நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில், கோட்டாபய அணியினர் இம்முறை இனவாதத்தை மாத்திரம் மையமாகக் கொண்டு, தமது தேர்தல் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளார்கள்.
“குறிப்பாக, கோத்தபாய அணியினர், சிறுபான்மை மக்களின் எவ்வித வாக்குகளும் எமக்குத் தேவையில்லை என ஒரு தலைபட்சமாக நிராகரித்துக் கொண்டு இத்தேர்தலில் களமிறங்கி உள்ளார்.
“அவ்வாறு இவர்கள் பெரும்பான்மை சமூகத்தினுடைய அதிகபட்ச வாக்குகளின் மூலம் வெற்றி பெறுவார்களானால், எதிர்காலத்தில் இந்நாட்டு மக்களுக்கும் அவருக்கெதிராக செயற்படுகின்ற ஏனைய கட்சிகளுக்கும் ஒரு முக்கிய செய்தியை இவரது வெற்றி உணத்தி நிற்கும்.
“அதாவது, இனவாதத்தை தூண்டி இனவாத சக்தியின் மூலம் பெளத்த பெரும்பான்மை வாக்குகளை தக்க வைத்துக் கொள்வதன் மூலமே இந்நாட்டினுடைய ஆட்சியை கைப்பற்ற முடியும் என்ற ஓர் இனவாத செய்தியை உணர்த்தி விடும்.
இதன் காரணமாக, எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகம் இந்த நாட்டிலே வாழ்வது மிகப் பாரிய கேள்விக்குறியாக மாறும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
“இவ்வாறான இனவாத செயற்பாடுகளை மக்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். இந்நாட்டில் சிறுபான்மை சமூகத்துக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத செயற்பாடுகளுக்கெதிராக சிறுபான்மை சமூகங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையாக செயற்பட்டு இனவாதமற்ற, ஐக்கிய ஒருமைப்பாட்டை வலியுறுத்துகின்ற, ஒரு ஜனநாயக நாட்டுக்குத் தேவையான ஆளுமைப் பண்புகளைக் கொண்ட ஒருவரை, ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்.
“ஆகவே, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரமதாஸவை ஆதரவளிப்பதனூடாக மாத்திரமே இனவாதச் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கூடியதாக இருக்கும் என்ப,தை இந்நாட்டில் வாழ்கின்ற மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago