Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
மழை வெள்ளத்தினால் ஏற்படும் இடர் முன் ஆயத்தம், இடர்களை எதிர்கொள்வதில் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் இடர்களின் பின்னரான பணிகள் எனும் விடயங்கள் பற்றிய கலந்துரையாடல் வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில்; மட்டக்களப்பு மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், மாவட்ட சிவில் இராணுவ அதிகாரி மேஜர் அனுரதிலக, மட்டக்களப்பு மாவட்ட கடற்படை பொறுப்பதிகாரி எதிரிவீர, வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி, வவுணதீவு மற்றும் ஆயித்தியமலை நிலைய பிரதி பொலிஸ் அதிகாரிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட இன்னும் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்
தற்போது பருவமழைக் காலம் ஆரம்பித்துள்ளதால் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் இடர்களை எதிர்கொள்வது மற்றும் தாழ்நில பிரதேசங்களில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவது மாரிமழை காலத்தில் சுகாதார சேவைகள், போக்குவரத்து, சுத்தமான குடிநீர் வசதிகள் வழங்குதல் உள்ளிட்ட இடர் ஆயத்த சேவைகள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago