Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 நவம்பர் 07 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன்
பாடசாலையையும் அதன் உடமைகளையும் பாதுகாக்கவேண்டிய கடமைகளும் பொறுப்பும், பெற்றோர் கைகளிலேயே உள்ளது என்று பட்டிருப்பு கல்வி வலயத்தின் ஆசிரிய மத்திய நிலையத்தின் முகாமையாளர் எஸ்.குருபரன் தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில், பிளான் இன்டர்நெஷனல் அமைப்பின் ஏற்பாட்டில் நாவிதன்வெளிக் கல்விக்கோட்டத்திலுள்ள சது கணேஷா வித்தியாலய பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு, சிறுவர் நேய அணுகுமுறைக் கூடாக தரமான ஆரம்பக்கல்வியை உறுதிப்படுத்தல் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாடசாலையின் அதிபர் பொன் பாரதிதாசன் தலைமையில், நேற்று வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற இந்த நிகழ்வில், உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஏ.றசூல் பிளான் இன்டர்நெஷசனல் அமைப்பின் கள உத்தியோகத்தர் கே.இ.சுதர்சன் கலந்துகொண்டனர்
அவர் மேலும் உரையாற்றுகையில், 'ஒரு பாடசாலையை எடுத்துக்கொண்டால், அங்குள்ள அதிபரோ ஆசிரியரோ நிரந்தரமானவரல்ல. அவர்களுக்கு அப்பாடசாலையும் சொந்தமல்ல அப்பாடசாலை அங்குள்ள பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் உரித்தானது அதனை பாதுகாக்கவேண்டியது பெற்றோரின் கடப்பாடாகும்' என்று அவர் கூறினார்.
'இன்று அரசாங்கத்தால் இலவசமாக வழங்கப்படும் சொத்துக்களை சரியாக பயன்படுத்தவேண்டும். இன்று பெற்றோர்கள் விடும் தவறு காரணமாகத்தான், பல பிள்ளைகள் வழிதவறி பிழையான திசைக்குச் செல்லுகின்றனர் அந்த நிலைக்கு நீங்கள் உங்கள் பிள்ளைகளை விடக்கூடாது. இந்த நாட்டிலே விலை மதிக்கமுடியாத பொக்கிசங்களாகவே பிள்ளைகள் உள்ளனர் அவர்களை நல்ல முறையில் வழிநடாத்தி எடுக்கும் பொறுப்பு அனைவரினது கைகளிலே உள்ளது' என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
36 minute ago
1 hours ago