Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான், க. விஜயரெத்தினம்
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வீட்டுத் தேவைகளின் நலன் கருதி, இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற வீட்டுத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், ஐந்து நிறுவனங்களின் ஊடாக, 20,000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கமைய, பிரதமர் அலுவலகத்தின் ஒழுங்கமைப்பில் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம். உதயகுமார் தலைமையில், மாவட்ட செயலகத்தில் இன்று (10) நடைபெற்றது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கான வீட்டுத் தேவைகள், மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்குத் தேவைப்படுகின்ற அத்தியாவசிய வீடுகள், சுகாதார வசதிகள், மலசலகூட வசதிகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இதற்கு மேலதிகமாக, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, விவசாயம், கால்நடை போன்றவற்றுக்கான பெறுமதி சேர்க்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாவட்ட செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
19 minute ago
35 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
35 minute ago
3 hours ago
3 hours ago