Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
“மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில பொதுச் சந்தைகளில், இனவெறுப்புப் பிரசாரங்களை சில விஷம சக்திகள் மேற்கொண்டுள்ளார்கள். இந்த நிலைமையை விஸ்ரூபமெடுக்க, சமூக நலன் விரும்பிகள் அனுமதிக்கக் கூடாது” என, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஷிப்லி பாறுக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது விடயமாக இன்று (31) அவர் தெரிவித்ததாவது,
“இதுபோன்ற இனவெறுப்புச் செயற்பாடுகளால், சமூகங்களுக்கிடையில் இனக்கலவரத்தைத் தோற்றுவிக்க சில தீய சக்திகள் முயல்கின்றமை, திட்டவட்டமாகத் தெளிவாகின்றது.
“இவர்களின் செயற்பாட்டால் பாதிக்கப்படுவது, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த அன்றாடம் கூலித் தொழிலையும் வீதியோரங்களில், வாராந்தச் சந்தைகளில் பொருட்களை விற்பனை செய்யும் அப்பாவி வியாபாரிகளேயாகும்.
“விசமிகள் இவ்வாறானதொரு சந்தர்ப்பத்பை் பயன்படுத்துவதற்கு, பொதுநலனில் அக்கறை கொண்டவர்கள் இடமளிக்கக் கூடாது.
“அப்பாவிகள் பாதிக்கப்படாதிருக்கும்படியான உரிய பாதுகாப்பு ஒழுங்குகளைச் செய்யுமாறு, மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
“இது விடயமாக உடனடிக் கவனம் செலுத்துமாறு உள்ளூர் அரசியல் தலைமைத்துவங்கள், சமூக நலச் செயற்பாட்டாளர்கள், பொதுநல நிறுவனங்கள், சமய சகவாழ்வு அமைப்புகள் ஆகியோரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
“இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியிலுள்ளவர்களை இனங்கண்டு, அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய சகல விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பொலிஸ் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
7 hours ago