Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.திவாகரன்
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை களப்பு பகுதியில் இன்று (20) கசிப்பு நிலையம் முற்றுகை இடப்பட்டுள்ளது.
இதன்போது, 6 பரல்களில் கசிப்பு உற்பத்திக்கான 1,000 லீற்றருக்கும் மேற்பட்ட கோடா கைபற்றப்பட்டுள்ளன.
இளைஞர்களின் உதவியோடு, அப்பகுதியின் கிராம சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், அண்மைய கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் களப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே இப்பெரும் தொகையான பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பொருள்கள் அனைத்தும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
கிராமங்களில் உள்ள இளைஞர்கள், சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஒத்துழைக்கின்றமை முன்மாதிரியான செயற்பாடாகும். இது போன்று ஏனைய இளைஞர்களும் முன்வருகின்ற போது சட்டவிரோத செயற்பாடுகளை இலகுவாக கட்டுப்படுத்த முடியுமெனவும் சமூக செயற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையிலும், பல இடங்களிலும் கசிப்பு உற்பத்தி நிலைகள் தொடர்ச்சியாக முற்றுகை இடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
களப்பு, நீர் நிலை அண்டிய பகுதிகளிலே அதிகளவான உற்பத்தி நிலையங்கள், மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
14 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
3 hours ago