எம்.எம்.அஹமட் அனாம் / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையில் இயங்கும் நிலையிலுள்ள அட்டை தயாரிக்கும் இயந்திரத்தை இயங்க வைத்தால், ஆலையில் மீண்டும் உற்பத்தியை ஏற்படுத்தலாமென, தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
அதன் தொழில்நுட்ப அறிக்கையைப் பெற்ற பின்னர், குறித்த இயந்திரத்தை இயங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலைக்கு, நேற்று (07) விஜயம் செய்த தேசிய கடதாசி கூட்டுத்தாபனத்தின் தலைவர், ஆலை உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்ட போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையை மீள இயக்கச் செய்வதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்குத் தான் முயற்சித்து வருவதாகவும் இந்த ஆலையை புனரமைத்து, மீள் இயக்கப்பட வேண்டுமென, பணிப்பாளர் சபைக் கூட்டத்துக்கு, திரைசேறியில் இருந்து வந்தவர்களிடம் தெரிவித்திருந்ததாகவும் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago