Janu / 2026 மே 07 , பி.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு வாவியில் அடையாளம் காணப்படாத இரு ஆண்களின் சடலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் வியாழக்கிழமை (07) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் உள்ள வாவியில் இரு சடலங்கள் மிதந்து கரை ஒதுங்கியிருப்பதை இன்று மாலை 5.00 மணியளவில் அவதானித்த பொதுமக்கள், இது குறித்துப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவு பொலிஸார், நீரில் மூழ்கியிருந்த இரண்டு ஆண்களின் சடலங்களையும் மீட்டனர். உயிரிழந்தவர்கள் யார்? அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள்? என்பது குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
சடலங்களை நீதிமன்ற அனுமதியுடன் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராஜா சரவணன்

1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago