Suganthini Ratnam / 2016 ஜனவரி 24 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள இரண்டு பலசரக்குக் கடைகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருட்டுப் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கபுறடி வீதியிலுள்ள பலசரக்குக் கடையொன்றினதும்; முகைதீன் மெத்தைப் பள்ளிவாசல் வீதியிலுள்ள பலசரக்குக் கடையொன்றினதும் கதவுகள் உடைக்கப்பட்டு திருட்டுப் போயுள்ளதாக பொலிஸாரிடம் அக்கடைகளின் உரிமையாளர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்போது, இவ்விரு கடைகளிலுமிருந்து சுமார் நான்கரை இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இம்முறைப்பாடுகளைத் தொடர்ந்து சம்பவ இடங்களுக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .