2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இரத்த தானம்

Niroshini   / 2015 நவம்பர் 18 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் உள்ள குருதித் தட்டுப்பாடடை நிவர்த்திக்கும் நோக்கோடு இரத்த தான நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை தாண்டவன்வெளி பியூட்ச மயின்ட் கின்டர் காடன் பாலர் பாடசாலையில் நடைபெற்றது.

பியூட்ச மயின்ட் கின்டர் காடன் பாலர் பாடசாலையின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட இரத்ததான நிகழ்வு அதன் பணிப்பாளர் வி. மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

சிறுவர்கள் வளரும்போதே அவர்களிடத்தில் மனிதாபிமான பணிகளை வளர்க்கும் நோக்கோடும் மற்றவர்களுக்கு இரங்கி உதவி புரியும் மனப்பான்மையின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கோடும் சிறார்களின் முன்பே இப்பணி நடத்தப்பட்டதாக பணிப்பாளர் தெரிவித்தார்.

பாலர் பாடசாலையின் பணிப்பாளர் மற்றும் சிறார்களின் பெற்றோர் இரத்த மாதிரிகளை வழங்கியபோது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பாளர் வைத்தியக் கலாநிதி எஸ். விவேகானந்தன் மற்றும் தாதியர்கள் இரத்த மாதிரிகளை சேகரித்தனர்.

மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சிகள் சிறுவர் சமாதானப் பூங்காவின் வளவாளரினால் சிறார்களுக்கு உணர்வுமிக்க மற்றும் ஆளுமையுடன் கூடிய தலைமைத்துவத்தை வளர்ப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

உடலில் உள்ள செங்குருதி சிறுதுணிக்கைகளின் ஆயுட்காலம் 4 மாதங்களாக உள்ள நிலையில் ஆயுட்காலம் ஒரு மாதமாக குறைக்கப்படும்போது ஏற்படும் தலசீமியா நோயினால் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்காக  இரத்த மாதிரிகள் நோயாளிகளுக்கு பாய்ச்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X