Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பொலிஸ் பிரிவில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த இருவரையும், எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஹபீப் ரிபான், நேற்று வெள்ளிக்கிழமை (19) உத்திரவிட்டுள்ளார்.
ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனையைச் சேர்ந்த சந்தேகநபர்களை, கடந்த வியாழக்கிழமை (18) இரவு கைதுசெய்ததுடன், திருட்டுக்குப் பயன்படுத்திய முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தம்பிகநவரத்ன தெரிவித்தார்.
கல்குடா பொலிஸ் பிரிவில் கல்குடா, பாசிக்குடா, கருங்காலிச்சோலை மற்றும் கல்மடு போன்ற பிரதேசங்களில் இரவு வேளைகளில் கோழிகள், ஆடுகள் மற்றும் மாடுகள் தொடர்ந்து திருட்டுப் போயுள்ளன.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு கருங்காலிச்சோலை பிரதேசத்தில் இருந்து ஓர் ஆட்டை, சந்தேகநபர்கள் திருடிய வேளையில் ஆட்டின் உரிமையார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago