2025 மே 07, புதன்கிழமை

இராசமாணிக்கத்தின் 107ஆவது ஜனன தினம்

வா.கிருஸ்ணா   / 2020 ஜனவரி 21 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவரும் பட்டிருப்புத் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.மு.இராசமாணிக்கத்தின் 107ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு, பல்வேறு நிகழ்வுகள் இன்று (21) நடைபெற்றன.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இவை நடைபெற்றன.

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடியில் உள்ள சி.மு.இராசமாணிக்கத்தின் திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, அஞ்சலி செலுத்தப்பட்டது.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், களுவாஞ்சிகுடி பிரதேச கிராம முக்கியஸ்தர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அதேபோன்று, மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்தில் உணவு வழங்கிவைக்கப்பட்டதுடன், அங்குள்ள சிறுமிகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

முண்முனை மேற்கு பிரதேசசபையின் தவிசாளரும் சக்தி இல்லத் தலைவருமான ந.புஸ்பலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X