Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜூன் 15 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சகா
கல்முனை உவெஸ்லி உயர்தர கல்லூரியில், இரண்டு மாதங்களாக நிலைகொண்டிருந்த இராணுவ இடைத்தங்கல் முகாம் மூடப்பட்டு, கல்லூரி அதிபர் த.கலையரசனிடம் பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து, கல்லூரிக்கு இன்று (15) விஜயம்செய்த சுகாதாரப் பிரிவினர் அங்கு தொற்றுநீக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
விடுமுறையில் சென்றிருந்த இராணுவத்தினர், கொவிட்19 அசாதாரண சூழ்நிலைமை காரணமாக, ஒரே நேரத்தில் விடுமுறை இரத்துச் செய்யப்பட்டு, முகாம்களுக்கு திருப்பியதால் ஏற்பட்ட இடப்பற்றாக்குறை காரணமாக, தற்காலிகமாக கல்முனை உவெஸ்லி கல்லூரியில் தற்காலிகமாக முகாமிட்டிருந்தனர்.
எனினும், பாடசாலைகள் தொடங்குவதற்கு வசதியாக இம்முகாம் மூடல், ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து அதிபர் தெரிவிக்கையில், “எமது கல்லூரியை ஏப்ரல் 20ஆம் திகதி இராணுவத்தினர் இடைத்தங்கல் முகாமாக பாரமெடுத்தனர். ஆரம்பத்தில் சுமார் 77இராணுவத்தினர் இங்கு நிலைகொண்டிருந்தனர். எனினும், கல்லூரியின் நல்லதம்பி மண்டபத்தில் மாத்திரமே கட்டில்கள் போடப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
“இராணுவத்தினர் தங்கியிருந்த காலத்தில், கல்முனை பிராந்திய சுகாதார பணிமனையால் தொடர்ச்சியாக தொற்றுநீக்கம் முன்னெடுக்கப்பட்டிருந்தது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago
38 minute ago
52 minute ago