Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 மே 15 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ், நடராஜன் ஹரன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்
“கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒரு குறுகிய எல்லைக்குள் நடத்தினோம். ஆனால், இவ்வருடம் சற்று பரந்தளவில் இரண்டு நாட்கள் அனுஷ்டிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்” என, கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சதாசிவம் டினேஸ்காந்த் தெரிவித்தார்.
இதற்கமைய, நாளை 17ஆம் திகதி இரத்ததான நிகழ்வும், 18ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதெனவும் மாணவர் ஒன்றியத் தலைவர் சதாசிவம் டினேஸ்காந்த் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற ஓர் இனஅழிப்பு நாள் மே 18. இந்தப் இனப்படுகொலையை நினைவுகூரும் முகமாக தமிழர் தாயகத்தில் அனைத்து இடங்களிலும் அனுஷ்டிப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
“இந்த அனுஷ்டிப்பு நிகழ்வுகள் இத்துடன் நின்றுவிடாது எதிர்வருகின்ற காலங்களிலும் எமது அடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
“இதற்காக எமது அரசியற் தலைமைகள் சிறந்த வழிவகைகளை அமைத்து எதிர்கால சமுதாயத்துக்கு இவ்வாறானதொரு அழிவு நடைபெற்றிருக்கின்றது, இனிவரும் காலங்களில் இவ்வாறான துயர் நடைபெறாமல் இருப்பதற்குரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
“உயிரிழந்த எமது உறவுகளுக்காக ஓர் ஆராதனை நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளோம். இதற்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கல்விசார், கல்விசாரா ஊழியர்கள், பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025