2025 மே 20, செவ்வாய்க்கிழமை

இரு வாரங்களில் ஒட்டமாவடி ஒளிரும்

பைஷல் இஸ்மாயில்   / 2017 நவம்பர் 28 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு, ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் வீதி மின்விளக்குகளை உடனடியாகப் பொருத்துமாறு, ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளரிடம் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எஸ்.எம்.எம்.அமீர் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எச்.எம்.எம்.ஹமீமுக்கும் பிரதியமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, செயலாளர் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்தார்.

மின்விளக்குகள் சில பழுந்தடைந்து காணப்பட்டுள்ள நிலையில் இரவு நேரங்களில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாகவும், இதனால்  மக்கள் அச்சத்தில் உள்ளனரெனவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், பழுதடைந்து காணப்படுகின்ற சகல மின்விளக்குகளையும் இரண்டு வாரங்களுக்குள் பொறுத்தி முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X