2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இலக்கிய விழாவும் மலர் வெளியீடும்

Editorial   / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கலாசார அலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம் நடத்தும் பிரதேச கலாசார இலக்கிய விழாவும் “மருதோன்றி – 8” மலர் வெளியீட்டு நிகழ்வும், ஓட்டமாவடி தேசிய பாடசாலை கேட்போர் கூட்டத்தில் நாளை (19) காலை 09 மணிக்கு நடைபெறவுள்ளன.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ்.நிஹாராவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ச.நவநீதன் கலந்துகொள்ளார்.

அத்தோடு, சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் ஆ.நவேஸ்வரன், ஓட்டமாவடி பிரதேச சபைத் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X