Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
ஆர்.ஜெயஸ்ரீராம் / 2019 ஜனவரி 30 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் கனிய மண் (இல்மனைட்) அகழ்வுத் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை நிறுத்துமாறு வலியுறுத்தி, வாகரை பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று (30) பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கதிரவெளி பிரதேசப் பொதுமக்களும் சமூக அமைப்பினரும் இணைந்து, இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களான பால்சேனை வடக்குத் தொடக்கம் வெருகல் வரையான கதிரவெளி, புதூர், புச்சாக்கேணி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக, கனிய மணல் அகழ்வும் தொழிற்சாலை அமைக்கும் ஆரம்ப வேலைகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இது தொடர்பாகத் தமக்கு எவ்விதமான தெளிவூட்டல்களும் இல்லையென்றும் இத்தொழிற்சாலையை அமைப்பதால் நீர், நில, வளிச் சூழல்கள் பாதிப்படைவதாகவும், கடல்வளம் பாதிப்படையும் என்றும் நிலத்தடி நீர் பாதிப்பிற்குள்ளாகி, எமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை பாதிப்படையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களான.சீ.யோகேஸ்வரன், எஸ்.வியாழேந்திரன், பிரதேச சபைத் தவிசாளர் சி.கோணலிங்கம், பிரதேச செயலாளர்.எஸ் ஹரன், வாகரைப் பொலிஸ் அதிகாரி உள்ளிட்டோரிடம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கையளித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
30 minute ago
41 minute ago
50 minute ago