2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இளைஞர்களை வலுவூட்டும் அமெரிக்கத் தூதரகம்

Niroshini   / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,வடிவேல் சக்திவேல்

அமெரிக்கத் தூதரகத்தின் வருடாந்த இளைஞர் வலுவூட்டல் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக 16 சிவில் சமூக நிறுவனங்களுக்கு சுமார் 150,000 அமெரிக்க டொலர்களை அமெரிக்கத் தூதரகம் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

தமது சமூகத்தை முன்னேற்றுவதற்கு இளைஞர்கள் தமது சக்தியையும் ஆக்கத்திறனையும் பயன்படுத்த இலங்கை இளைஞர்களுக்கு உதவுவதில் அமெரிக்கா பெருமை கொள்கின்றது.

நிபுணத்துவம் கொண்ட குழுவினரால் ஆழமாக ஆய்வுக்குட்பட்ட பல பிரேரணைகளில் இருந்து, சுற்றுச் சூழல்,இளைஞர் அபிவிருத்தி, கலாசார பரிமாற்றங்கள், பால்நிலை சார் வன்முறை மற்றும் கல்வி, பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தல் போன்ற முக்கிய விடயங்கள் சார்ந்து இந்த 16 உதவித் தொகை பெறுநர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த செயற்றிட்டங்கள் மொனராகலை, அம்பாந்தோட்ட, மாத்தளை, அனுராதபுரம், கொழும்பு, மாத்தறை, காலி, ஹொறணை, அம்பாறை, யாழ்ப்பாணம், சீனிகம, தங்காலை, இரத்தினபுரி, மட்டக்களப்பு, கட்டுநாயக்கா, மற்றும்
கொக்கல சுதந்திர வர்த்தக வலயம் ஆகிய பல பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படவுள்ளன.

தொடர்ந்து ஆறாவது வருடமாகவும் அமெரிக்கத் தூதரகம் இளைஞர் வலுவூட்டல் உதவித் தொகை நிகழ்ச்சியின் ஊடாக உதவி வழங்கியுள்ளது.

இதுவரையான  காலப்பகுதியில் மொத்தமாக  95 செயற்திட்டங்களுக்காக 852,588 அமெரிக்க டொலர்களை அமெரிக்கத் தூதரகம் வழங்கியுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X