Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 08 , மு.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
தேசிய இளைஞர்; சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 18ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அம்மன்;றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்புத் தொகுதியிலிருந்து 14 பேரும் கல்குடாத் தொகுதியிலிருந்து 20 பேரும் பட்டிருப்புத் தொகுதியிலிருந்து 11 பேரும் வேட்பாளர்களாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக மட்டக்களப்புத் தொகுதியில் 6,185 பேரும் கல்குடாத் தொகுதியில் 5,355 பேரும் பட்டிருப்புத் தொகுதியில் 4,456 பேருமாக மொத்தம் 15,996 இளைஞர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
மாவட்டத்தில் 21 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு ஆகிய 03 தொகுதிகளிலிருந்தும் வாக்கெடுப்பின் மூலம் 03 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago