Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 நவம்பர் 01 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
இளவயதுத் திருமணமும் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய சவாலாக உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
சிறுவர் உரிமைகள் தொடர்பான குறும்படங்களின் தொகுப்பு மற்றும் பாடல் வெளியீட்டு விழா, மட்டக்களப்பு செங்கலடி செல்லம் பிறீமியர் திரைப்பட மாளிகையில் சனிக்கிழமை (31) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு உரையாற்றிய அவர், 'ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தினாலும் ஏனைய சிறுவர் நலன்சார்ந்த அமைப்புகளினாலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் சம்பந்தமாக மிக முக்கியமான பிரச்சினைகள் இனங்காணப்பட்டுள்ளன.
இளவயதுத் திருமணம், பாடசாலையிலிருந்து இடைவிலகல் உட்பட தங்களது எதிர்கால வாழ்க்கையைச் சீர்குலைக்கின்ற நிலைமை காணப்படுவதாக ஆய்வறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ளன.' என்றார்.
'பாடசாலைக்குச் செல்லவேண்டிய சிறுவர்கள் வீதியில் பொருட்கள் விற்பனை செய்வதை வாகரையில் நாங்கள் அவதானித்திருந்தோம். இருப்பினும், வாகரைப் பிரதேச செயலாளரின் அயராத முயற்சினால் அந்த நிலைமை தற்போது மாற்றமடைந்துள்ளது.
எமது எதிர்கால வளம் சிறுவர் சமூதாயம். இந்தச் சமூதாயத்தை முளையில் கிள்ளியெறிந்து சீரழிக்காது பாதுகாக்க வேண்டும். சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டுமென்ற மனப்பாங்கு அனைத்துத் தரப்பினரிடமும் வரவேண்டும்' எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago