2025 மே 19, திங்கட்கிழமை

இளைஞர்கள் கடத்தல் விவகாரம் ; வேட்பாளர் இருவருக்கு தொடர்பு

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 ஜனவரி 16 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - கல்லடியில் இரு இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்று (15) கைது செய்யப்பட்டவர்களில் இருவர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள், மட்டக்களப்பு மாநகர சபைத் தேர்தலில், சுயேட்சையாக போட்டியிடும் கஜ மோகன் மற்றும் கவிதாஸ் ஆகியோர் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடத்தப்பட்ட இளைஞர்களை பிறிதொரு இடத்துக்கு கடத்திச் சென்றுக்கொண்டிருந்த வேளையில், மட்டக்களப்பு - மாமங்கம் பார் வீதியில் வைத்து நேற்று (15) காலை பொலிஸார் மேற் கொண்ட சுற்றி வளைப்பில் கடத்தப்பட்ட இரு இளைஞர்களும் மீட்கப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட மேற்படி இரண்டு வேட்பாளர்கள் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கடத்தலுக்காக பயன் படுத்தப்பட்ட இரண்டு கார்கள் மற்றும் இளைஞர்களை தாக்கிய சிலாகை மற்றும் தடி என்பவைகளையும் கைப்பற்றியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X