Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்புக்கு வருகை தந்த இழப்பீட்டுக்கான அலுவலக அதிகாரிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் பெறும் கருத்தறியும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில், டேர்பா மாநாட்டு மண்டபத்தில் நேற்று (17) இக்கலந்துரையாடல் நடைபெற்றது.
யுத்த பாதிப்புக்குள்ளான மக்களுக்கு எவ்வாறான உதவிகள் செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனைகளை, யாழ்ப்பாணம், கிளிநோச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் மக்களிடம் கலந்துரையாடிப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், இறுதியாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இக்கலந்துரையாடல் நடைபெறுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் பெற்று, இழப்பிடுகளுக்கான நிவாரணம் வழங்குவதற்கு ஏதுவான சட்டத்தை, நாடாளுமன்றத்தில் அங்கிகரித்து, அதனை அமுல்படுத்துவதற்கு ஏதுவாகவே, இக்கலந்துரையாடல் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .