Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 02 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் > இன்று (02) திங்கட்கிழமை பிற்பகல் தோண்டி எடுக்கப்பட்டது
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் மீது கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நசார் மொஹமட் ஆசாத் என்பவரின் உடற்பாகங்கள் கடந்த 26 ஆம் திகதி மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் பொலிஸாரால் புதைக்கப்பட்டது.
இதனையடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உடனடியாக அதனை தோண்டி அகற்றுமாறும் வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்கள் மட்டக்களப்பில் இடம் பெற்றன.
இந்த விவகாரம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு பொலிஸாரால் மீண்டும் கொண்டு செல்லப்பட்டதையடுத்து நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் புதைக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரியின் உடல் பாகங்களை தோண்டி எடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள், நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் முன்னிலையில் தோண்டப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் பொலிஸ் அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகள் சமூகமளித்திருந்தனர்.
மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் தோண்டி எடுக்கப்பட்ட உடற்பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
5 hours ago