எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 மார்ச் 18 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பொலிஸ் அதிகாரிகள் நோயற்றவர்களாக காணப்படுவதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்” என, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஜெயகொட ஆராச்சி தெரிவித்தார்.
மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில், நேற்று (17) நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாமமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இன்று நீரிழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்ரோல் போன்ற இருதய நோய் என்ற பல தொற்றா நோய்கள் காணப்படுகின்றன. அதிலிருந்து நம்மை நாம் பாதுகாப்பதுடன் குறிப்பாக தேக ஆரோக்கியமாக இருந்து கொள்ள வேண்டும்.
“பொலிஸார் பொதுமக்களுக்கு சேவை செய்கின்றவர்கள். தமது உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மக்களுக்கான சேவையை நாம் வழங்க முடியும்” என்றார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago