Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் என்பவற்றில் கடமையாற்றும் உணவு தயாரிப்போர் மற்றும் உணவு வகைகளை கையாள்வோர் மருத்துவ சான்றிதழை பெற்றுக் கொள்ள வேண்டுமென மட்டக்களப்பு மாநகர சபையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் என்.தேவநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இது தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமாரின் ஆலோசனைக்கமைய கடந்த இரண்டு தினங்களாக மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளுக்கு பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் கடமையாற்றும், உணவு தயாரிப்போர் மற்றும் உணவு வகைகளை கையாள்வோர் மட்டக்களப்பு சுகாதார அலுவலகத்துக்கு சென்று அங்குள்ள சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று பத்து நாட்களுக்குள் மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவ்வாறு மருத்துச் சான்றிதழை பெறத்தவறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
27 minute ago
34 minute ago
46 minute ago