2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

உதவி வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2017 பெப்ரவரி 12 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, துசா

முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவி வழங்கும் நிகழ்வு, இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதார மற்றும் கல்வி அபிவிருத்தித் திட்டங்களை பிரதானமாக மேற்கொண்டுவரும் முனைப்பு நிறுவனமான,து மருத்துவ உதவிகளையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இறக்கும் ஏழைகளின் பிரேதங்களை வீடுகளுக்கு ஏற்றிக் கொடுக்கும் வேலைத்திட்டங்களையும் மேற்கொண்டு வருவதுடன், அனாதரவற்றவர்களின் பிரேதங்களையும் அடக்கம் செய்வதற்கான உதவிகளையும் இயற்கை அனர்த்தஇழப்புக்களுக்கும் உதவிகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் கணவனை இளந்த பெண் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன் அக்குடும்பங்களின் பிள்ளைகளின் கல்வி அபிவிருத்தியினையும் முனைனெடுக்கும் நோக்கிலேயே இந்த உதவிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது, மா அரைக்கும் இயந்திரம், தையல் இயந்திரம் என்பன சுயதொழிலுக்காக வழங்கப்பட்டதுடன், ஆடு வளர்ப்புக்கான நிதி உதவி, சிற்றுண்டி தயாரித்து வழங்குவதற்கான  நிதி உதவி, புடவைக் கடை அமைப்பதற்கான நிதி உதவி, மருத்துவத்துக்கான உதவி என்பன வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் சி.தவராசா பிரதம அதிதியாகவும் முனைப்பு சுவிஸ் அமைப்பின் நிருவாக உறுப்பினர் கிருபா மற்றும் அவருடைய பாரியார் விதுசா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கௌரவ அதிதிகளாக முனைப்பு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மு.அருணன்,முனைப்பின் செயலாளர் இ.குகநாதன்,பொருளாளர் அ.தயாநந்தரவி, ஆலோசகர் க.புஸ்பராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X