Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உயிர்வாயு உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப களப்பயிற்சி இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ரிவேய்ரா சுற்றுலாப் பயணிகள் விடுதியில் வழங்கப்பட்டதாக ஜனதாக்ஸன் நிறுவனத்தின் இணைப்பாளரும் வளவியலாளருமான அனுலா அன்ரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனதாக்சன் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் ஒருங்கிணைந்த சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்யும் நோக்கில் இந்த கள விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செக் குடியரசைச் சேர்ந்த பீப்பிள் இன் நீட் எனும் அரச சார்பற்ற நிறுவனம் 2011ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பிலும் இலங்கையின் வேறுபாகங்களிலும் திண்மக் கழிவு முகாமைத்துவத்தை மேற்கொண்ட உயிர்வாயுத் தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் ஈடுபட்டு வருகின்றது.
இதன்கீழ், சுற்றாடல் அதிகார சபை மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகம் ஆகியவற்றின் அனுசரணையில் தெரிவு செய்யப்பட்ட 33 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பாடசாலை ஆசிரியர்களுக்குமான தொழில்நுட்ப அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் இந்தக் கள விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள ரிவேய்ரா சுற்றுலாப் பயணிகள் விடுதியில் திண்மக் கழிவுகளைக் கொண்டு வெற்றிகரமான முறையில் உயிர்வாயு தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த கள விஜயத்தின்போது, உயிர்வாயு தொழில்நுட்பத்தின் மூலம் மீள் சுழற்சி முறையில் இயற்கைக்குக் கேடு விளைவிக்காத விதத்தில் மின்சாரம், இயற்கை எரிவாயு, பசளை, நீர் என்பனவற்றையும் சுழற்சி முறையில் தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருக்கலாம்.
இதனால், நாம் இயற்கைச் சூழலை கேடு விளைவிக்காத விதத்தில் பேணிப் பாதுகாப்பதோடு எமது பொருளாதாரத்தையும் கூடியளவு மீதப்படுத்திக் கொள்ளவும் முடிகிறது என்றார்.
இலங்கையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதிசெய்யும் நோக்கிலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவும் உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்குதல் சம்பந்தமான பயிற்சி நெறிகள் பல்வேறு மட்டத்தில் ஜனதாக்ஸன் நிறுவனத்தினால் முன்னெடுக்கபப்ட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
13 minute ago
21 minute ago