2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

உயிருக்கு போராடும் யானைக்கு சிசிச்சை

Freelancer   / 2023 பெப்ரவரி 21 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. விஜயரெத்தினம்

மட்டக்களப்பு ,கொம்மாதுறை தீவு பகுதியில், காயப்பட்ட காட்டு யானை, 10 நாள்களாக உயிருக்குப் போராடிவருகிறது.  மட்டக்களப்பு, அம்பாறை  வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சையளித்து, பராமரித்து வருகிறார்கள். 

செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொம்மாதுறை தீவுப் பகுதியில் காட்டு யானை, காலில் ஏற்பட்ட சூட்டுக் காயம் காரணமாக, நடக்க முடியாமல், உயிருக்குப் போராடி வந்தது. 

குறித்த யானை, கட்டுத் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் காலில் துப்பாக்கி சூடு பட்டுள்ளதால் எலும்பு உடைந்திருக்கலாம் எனவும் அம்பாறை  வனஜீவராசிகள் திணைக்களத்தின் வைத்தியர் நிஹால் புஷ்பகுமார தெரிவித்தார். 

மட்டக்களப்பு வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், விழுந்து கிடந்து உயிருக்கு போராடும் யானைக்கு உணவளித்து, பராமரித்து வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X