2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு கௌரவம்

Princiya Dixci   / 2021 ஏப்ரல் 11 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

நாட்டைக் காக்க யுத்தம் செய்து உயிர்த் தியாகம் செய்த இராணுவ, பொலிஸ், சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் குடும்பத்தினரை கெளரவிக்கும் நிகழ்வு, இன்று (11) நடைபெற்றது.

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு, பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நெளபர் தலைமையில், பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

யுத்தத்தில் அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் கெளரவிக்கப்பட்டதோடு, அர்ப்பணிப்புடன் சேவையாற்றிவரும் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் இதில் கெளரவிக்கப்பட்டனர்.

நிகழ்வின் அதிதிகளாக 23ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த, 231ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் பிரதீப் கமகே, 232ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகேனல் வசந்த ஹேவக்க ஆகியோரும் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜீ.எஸ்.ஜயசுந்தர, கட்டளை அதிகாரி லெப்டினன் கேனல் ஜெயசிங்க, வாழைச்சேன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, இராணுவ அதிகாரி புகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X