2025 மே 10, சனிக்கிழமை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்: 63 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல்

கனகராசா சரவணன்   / 2019 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட  ஜ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 63 பேருக்கும் தொடர்ந்து எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு,  மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான், நேற்று (16) உத்தரவிட்டார்.

குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, காத்தான்குடி பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் இராணுவத்தினர், பொலிஸார் இணைந்து நடத்திய தேடுதலின் போது, அப்பகுதியைச் சேர்ந்த 64 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட 64 பேரும், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, ஒருவர் மாத்திரம், நீதிமன்ற பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது 63 பேரையும் தொடர்ந்தும் விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X