2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

உருகுலைந்த நிலையில் சடலம் மீட்பு

Gavitha   / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊறணி பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் இருந்து, உருகுலைந்த நிலையில்  ஆண் ஒருவரின் சடலம் ஒன்றை நேற்று புதன்கிழமை (03) மீட்டதாக, மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் உள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மீட்கப்பட்ட இந்த சடலம் 36 வயது மதிக்கத்தக்க ஆணொருவருடையதாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X